Police Department News

தேவர் ஜெயந்தி விழா :எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை, 1200 போலீசார் பாதுகாப்பு, மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு

தேவர் ஜெயந்தி விழா :எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை, 1200 போலீசார் பாதுகாப்பு, மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எல்லைகளில் 15 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

113வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இன்று (29.10.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறையினர் எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு அலுவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர், என்னென்ன பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (30.10.2020) நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி மற்றும் செல்வன், 10 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 44 காவல் ஆய்வாளர்கள், 123 உதவி ஆய்வாளர்கள் உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எல்லையோரங்களில் 15 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. அதே போன்று அனைத்து உட்கோட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. இது தவிர ‘டெல்டா’ என்னும் 6 அதிரடிப்படையினர் மற்றும் ‘ஆல்பா’ என்னும் 8 அதிரடிப்படையினர் அடங்கிய காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, 149 முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு தனியாக (Picketing) நியமிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை ரோந்து மற்றும் அந்தந்த காவல் நிலைய நான்கு சக்கர வாகன ரோந்து மற்றும் இரு சக்கர வாகன ரோந்துகள் தவிர கூடுதலாக 26 நான்கு சக்கர வாகன சாலை ரோந்தும், 9 இரு சக்கர வாகன சாலை ரோந்து பணியும் நியமிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி மற்றும் செல்வன் ஆகியோரும், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரகம் பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், கோவில்பட்டி கலைக்கதிரவன், நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு இளங்கோவன், மாவட்ட குற்றப்பிரிவு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் மற்றும் சாத்தான்குளம் காட்வின் ஜெகதீஷ், திருநெல்வேலி பிரகாஷ், கன்னியாகுமரி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் பார்த்திபன், தூத்துக்குடி ஆயதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.