Police Department News

மக்கள் உயிரை காப்பாற்றும் வகையில் E.C.R – யில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கானத்தூர் J12 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் (சட்டம் ஒழுங்கு)

மக்கள் உயிரை காப்பாற்றும் வகையில் E.C.R – யில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கானத்தூர் J12 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் (சட்டம் ஒழுங்கு)

ஒவ்வொரு நாளும் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு கூலி வேலையை தேடி செல்கின்றனர்.அதில் குடிக்கார கணவனுடன் குடும்பம் நடத்தும் பெண்கள் நிறையபேர் இருக்கின்றனர்.இந்த பெண்கள் தன் பிள்ளைகள் படிப்புக்காகவும் உணவுக்கும் பணம் தேவைபடுவதையொட்டி கட்டிட வேலைக்கு செல்கின்றனர்.அப்படி போகும் ஒவ்வொருவரும் பேரூந்தில் வெவ்வேறு இடத்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.அவசர அவசரமாக வீட்டைவிட்டு வெளியே வரும்போது முககவசம் அணியாமல் உயிர் பயம் ஏதுமில்லாமல் வருகின்றனர்.இவர்களை பார்த்த கானத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் இலவசமாக முககவசமும் சாலையை எப்படி கடக்கவேண்டும் என்ற அறிவுரையும் கொரோனா பற்றி விழிப்புணர்வையும் சாலை பாதுகாப்பு பற்றியும் பல நன்மையான செயல்களை E.C.R மக்களுக்கு வழங்கி வருகிறார்.அதுமட்டுமன்றி சாலையோரங்களில் இருக்கும்

ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் போன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை தன்னுடைய சொந்த ஊதியத்தில் வழங்கி வருகிறார்.இப்படி இரவு பகல் பாராமல் மக்களுக்கு சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார் கானத்தூர் J12 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் இவர் காவல்துறையினரிடையே ஒரு உதாரணமாக திகழ்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.