மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மரங்கள் நடப்பட்டன.
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி, மரம் வளர்போம் மழை பெறுவோம் என்ற வாசகத்திறகு எடுத்துக் காட்டாக அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச் சூழல் மற்றும் மண் வளத்தை பாதுகாக்கவும்,நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் பல் வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைக்கப்பட்டது, இதில் ஒரு பகுதியாக மதுரை திடீர் நகர் C1, காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.மேலும் அவர் கூறுகையில் இதன் மூலம் காவல் நிலையங்கள் அழகுபெறும் மற்றும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கு சமூக ஆர்வளர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.