பொதுமக்களின் உயிரை தன்உயிராக கருதும் செங்கல்பட்டு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுரேஷ்பாபு மற்றும் செங்கல்பட்டு D2 காவல்துறை உதவி ஆய்வாளர் ( சட்டம் ஒழுங்கு) திரு.மாரிமுத்து அவர்கள்
தீபாவளி திருநாளுக்காக திருச்சி , மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம், பேருந்து மற்றும் அனேக வாகனங்களில் குடும்பத்தினரோடு GST சாலையில் சென்று கொண்டிருப்பதால் செங்கல்பட்டு சங்கச்சாவடியில் தமிழ் நாடு காவல்துறையினரால் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருக்கிறது.இதை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுரேஷ்பாபு மற்றும் செங்கல்பட்டு D2 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.மாரிமுத்து இருவரும் இணைந்து பொதுமக்கள் எவ்வித போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் செல்லவும் மற்றும் மாற்று திறனாளிகள் முதியோர் ஆகியோருக்கு தாகம் ஏற்ப்பட்டால் தண்ணீர் கொடுக்கவும் மற்றும் உடல்நிலை குறைவு ஏற்ப்பட்டால் ஆம்புலன்ஸ் ஏற்பாடும் செய்யப்பட்டு இரவு பகல் பாராமல் மக்கள் தீபாவளி பண்டிகையை நல்லபடியாக கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு பலவிதமான நன்மைகளை மக்களுக்கு செய்துவருகின்றனர்.இதுமட்டுமன்றி கொரோனா விழிப்புணர்வு பற்றியும் வாகனம் ஓட்டும் போது செல்போன் உபயோகிக்காமல் செல்லவும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாமல் செல்லும்படி ஒலிபெருக்கி மூலமாக அறிவுரைகளை வழங்கி மக்களுக்கு வாழ்த்துக்களுடன் வழியனுப்பி வைக்கின்றனர்.இப்படி உணவு அருந்தாமல் காலில் வலியோடு தூக்கத்தை இழந்து பொதுமக்களின் நலனில் தங்களுடைய பணியை சேவை என செய்யாமல் தியாகமாக செய்து வருகின்றனர் செங்கல்பட்டு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுரேஷ்பாபு மற்றும் செங்கல்பட்டு காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.மாரிமுத்து ( சட்டம் ஒழுங்கு)
