*குழந்தைகள் தின நாளை சிறுவர்களுடன் கொண்டாடிய திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்
15.11.2020 திண்டுக்கல் மாவட்டம். 14.11.2020 அன்று நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட YMR பட்டியில் உள்ள காவலர் சிறுவர் மன்றத்தில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் தீபாவளி பண்டிகை மற்றும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் புத்தகங்களை வழங்கி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். மேலும் குழந்தைகளுக்கு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பது குறித்தும், பட்டாசுகளை கவனமாக பாதுகாப்போடு வெடிக்கும் படியும் அறிவுரை கூறினார்கள்.
