மதுரை, தத்தனெரி பகுதியில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை
மதுரை மாநகர், செல்லூர் D2, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தத்தனெரி , அருள்தாஸ்புரத்தில் ராஜு மகன் பாலகிருஷ்ணன் வயது 54/2020, குடியிருந்து வருகிறார். இவரது தம்பி விஜயகுமார் வயது 37, இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆயிற்று, திருமணத்திற்கு பின் இவர் தன் குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டம் இருக்கூர் என்ற ஊரில் குடியிருந்து வந்தார் இவர் அங்கு பெயிண்டராக வேலை செய்து வந்தார், இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்தது, மேலும் கொரோனா சமயம் ஆகையால் வேலை சரியில்லாமல் போதிய வருமானம் இல்லை இதனால் மனைவியிடம் கோபித்துக் கொண்டு இரண்டு வாரத்திற்கு முன்பு மதுரையில் இருக்கும் தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார், இவரது அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்கள் கணவன் மனைவியை சேர்த்து வைக்க வேண்டி பல முறை தனது தம்பி மனைவிக்கு போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை எனவே தீபாவளி வரை இங்கேயே வேலை பார்க்கட்டும் அதன் பின் பேச்சி வார்த்தை நடத்தி சேர்த்து வைக்கலாம் என எண்ணி தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் தங்க வைத்தார், அந்த வீட்டிலிருந்து கொண்டு வேலைக்கு சென்று வந்தார், இந்த நிலையில் கடந்த 16 ம் தேதி காலையில் இன்று வேலைக்கு போகிறாயா என கேட்க போன் செய்த போது போனை எடுக்கவில்லை எனவே அவர் தங்கியிருந்த வீட்டிற்கு நேராக வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது, உடனே சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாக பார்த்த போது அவரது தம்பி கேபிள் வயரால் தனக்கு தானே தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன், அவரது மனைவிக்கு தகவல் சொல்லியனுப்பி விட்டு கதவை உடைத்து உள்ள சென்று பார்த்த போது அவரது தம்பி உடல் விரைத்து இறந்த நிலையில் இருந்தார், உடனே அவர் செல்லூர்D2, காவல் நிலையம் வந்து விபரத்தை கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்தார், புகார் மனுவை பெற்றுக்கொண்ட செல்லூர் காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார், அதன் பின் அவரின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.