இந்து மக்கள் கட்சி திடீரென சாலை மறியல்
திருப்பூர் மாநகரில் இந்து மக்கள் கட்சி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னையில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி அர்ஜுன் சம்பத் அவர்கள் மாலை அணிவிக்கும் போது வி. சி. க சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி திருப்பூர் மாநகரில் உள்ளது புது பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு கணேசன் அவர்கள் அறிவிப்பின் பேரில் சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் கலைந்து சென்றனர்.
