Police Recruitment

மதுரை மேலூரில் வேலையில்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு மூதியவர் தூக்கு போட்டு தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை

மதுரை மேலூரில் வேலையில்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு மூதியவர் தூக்கு போட்டு தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான காந்தி பார்க் ரோடு, ஸ்டார் நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவஞானம் மனைவி காந்திமதி வயது 50/2020, இவரது கணவர் சிவஞானம் அவர்கள் கொரோனா காலமாதலால் கடந்த ஒரு வருட காலமாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார் இதனால் மனநிலையும் சற்று பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இவரது மகள் சங்கீதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. திருமணச் செலவிற்காக பணம் விசயமாக வெளியே சென்று விட்டு சுமார் மாலை 5 மணியளவில் திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு, ஜன்னல் கதவு அனைத்தும் அடைத்து உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த காந்திமதி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கே அவரது கணவர் சிவஞானம் பேன் மாட்டும் கொக்கியில் தனக்கு தானே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, உடனே காந்திமதியம்மாள் அவர்கள் மேலூர் காவல் நிலையத்தில் சட்டப்படி தனது கணவரின் இறப்பு பற்றி விசாரணை நடத்தி நல்லடக்கதிற்கு அனுமதிக்கும்படி புகார் அளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் வட்ட ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து, ஆய்வாளர் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றார்.
செய்தி தொகுப்பு, M. அருள்ஜோதி, மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.