மதுரையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்சர் பொருத்திய 196 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
மதுரை மாநகர ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள் சாலையில் பயணம் செய்யும் பொது மக்களுக்கு பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் விதமான இரு சக்கர வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யும்படி கடந்த 19/12/2020 அன்று உத்தரவிட்டார்கள், அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர் முழுவதும் போக்கு வரத்து காவல் துறையினர் பொது மக்களுக்கு அச்சத்தையும் பயமுறுத்தல்களையும் ஏற்படுத்தும் விதமாக சாலையில் இரு சக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்து அபராதங்களும் விதிக்கப்பட்டன. அபராதம் விதிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களில் குறைந்த ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்கள் பொருத்தப்பட்ட பின்னர் போக்கு வரத்து காவல் துறை அதிகாரிகளிடம் காண்பித்து விட்டு, இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர்கள் அவர்களின் வாகனத்தை எடுத்தச் செல்ல அறிவுருத்தப்பட்டனர், கடந்த 19 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை 196 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
