வழி தவறி சென்ற குழந்தையை பிரிந்து வாடிய தாயின் கண்ணீரை துடைத்த தலைமைக் காவலருக்கு பாராட்டு
இராமநாதபுரம் மாவட்டம்¸ முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த சிறுவனை, பேருந்து நிலையத்தில் பணியிலிருந்த தலைமைக் காவலர் திரு.முனீஸ்வரன் அவர்கள் சிறுவனிடம் சென்று விசாரித்தார். அப்போது சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிய போது வழி தவறியதாக அறிந்த தலைமைக் காவலர் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து குழந்தையின் பெற்றோரை தேடி கண்டுபிடித்து தாயாரிடம் ஒப்படைத்தார். குழந்தையை பிரிந்து வாடிய தாயின் கண்ணீரை துடைத்த தலைமைக் காவலருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
