பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்களின் பாராட்டை பெற்ற பெண் போக்கு வரத்து காவலர்
மதுரை மாவட்டம், கரிமேடு மோதிலால் தெரு பகுதியில் வசித்து வருபவர் சமூக ஆர்வளர், மற்றும் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் தலைவருமான திரு அண்ணாதுரை அவர்கள் கடந்த 24 ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் உள் நுழை வாயில் பேரூந்துக்காக காத்திருந்தார், கிட்டத்தட்ட 4 மணி முதல் 4.30 வரை அவர் பேரூந்துக்காக காத்திருந்த சமயம் அங்கு போக்குவரத்து சிக்னலில் பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவலர் அவர்கள் ஒவ்வொரு சிக்னலையும் முழு கவனத்துடனும், மிகுந்த அர்பணிப்புடனும் அதே நேரத்தில் பாதசாரிகள், கைகுழந்தைகள், பெண்கள் பல்வேறு வகையான போக்குவரத்து வாகனங்கள் பற்றியும் சிகனலை மீறும் வாகனங்களையும் ஆம்புலன்ஸ் வரும் பொழுது வழி விடக்கூடிய உத்தரவுகள் போன்றவற்றைஉடனடியாக தகுந்த நேரத்தில் அறிவுறித்தி சிக்னலை கையான்ட விதம் மிகவும்நேர்த்தியாக இருந்ததாகவும் தனது சார்பிலும் தான் சார்ந்துள்ள இயக்மான மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் சார்பாகவும் பாராட்டினார், அதே சமயம் பொது மக்களும் பாராட்டினர். இ்வ்வாறு மக்களின் பாராட்டுலை பெற்ற காவலர் மதுரை மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் திருமதி. பைரவி அவர்கள் என தெரிய வந்தது, அவருக்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.
