சாலையில் விழுந்து அடிபட்ட நபருக்கு முதலு தவி அளித்த காவல் ஆய்வாளர்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே ஒருவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் திரு. அசோகன் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அவரை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
