Police Recruitment

IMEI மூலம் 165 செல்போன்களை கண்டுபிடித்த திருச்சி காவல்துறையினர்

IMEI மூலம் 165 செல்போன்களை கண்டுபிடித்த திருச்சி காவல்துறையினர்
திருச்சி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கவனக்குறைவால் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க திருச்சி ஆணையர் திரு.J.லோகநாதன்,IPS உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து மலைக்கோட்டை SI திரு.கருணாகரன் அவர்களின் தலைமையில், SSI திரு.தங்கராஜ் சிறப்பு காவலர்கள் திரு.சங்கர் திரு.சசிகுமார் மற்றும் திரு.பரமேஷ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது 09-01-2021 அன்று திருச்சி காவல் ஆணையர் தலைமை அலுவலகத்தில் உரியவர்களிடம் செல்போன்கள் ஒப்படைக் கப்பட்டன இந்நிகழ்ச்சியில் திருச்சி ஆணையர் திரு.J.லோகநாதன்,IPS அவர்கள் திருச்சி துணை ஆணையர் திரு.A.பவன்குமார் ரெட்டி, IPS சட்ட ஒழுங்கு. அவர்கள் மற்றும் துணை ஆணையர் திரு.R.வேதரத்தினம்,TPS குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து ஆகியோர் கலந்துகொண்டனர் இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.