Police Recruitment

காவலர்களின் குடும்பங்களின் மனதில் நீங்க இடம்பெற்றுவரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள்.

காவலர்களின் குடும்பங்களின் மனதில் நீங்க இடம்பெற்றுவரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள்.

தலைமை காவலர் குடும்பத்திற்கு காவல்துறை திரட்டிய ரூபாய் 12.40 லட்சம் நிதி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப வழங்கினார்.

சென்னை நகர காவல் நவீன கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் செந்தில்குமார் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்தபோது திடீரென உடல் நல பாதிப்பு அடைந்தார்.தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்தார்.செந்தில் குமாருக்கு சுனிதா என்ற மனைவியும் கல்லூரியில் படிக்கும் 2 மகள்கள் உள்ளனர்.

செந்தில்குமார் கடந்த 1997ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர் ஆவார்.ஏற்கனவே மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சுமார் ரூபாய் 4.5 லட்சம் செலவு செய்து உள்ள நிலையில் அவருடன் பணிக்கு சேர்ந்த 1997 ஆம் ஆண்டு இரண்டாவது பேட்ச் காவலர்கள்(தற்போது தலைமை காவலர்கள்)தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்து இறந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு உதவ முன்வந்தனர். அதன்பேரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1997 ஆம் ஆண்டு இரண்டாவது பேட்ச் காவலர்கள் சுமார் 2460 நபர்கள் ஒருங்கிணைந்து செந்தில்குமாரின் குடும்பத்திற்கு உதவுவதற்காக ரூபாய் 12 லட்சத்து 76 ஆயிரத்து 400 வசூல் செய்தனர்.தலைமை காவலர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் காவலர்கள் வசூலித்த பணம் ரூபாய் 12.6 லட்சத்தை இழந்த தலைமை காவலர் செந்தில் குமாரின் மனைவி சுனிதாவிடம் நேற்று 08.01.2021 வழங்கினார்.சுனிதா மற்றும் அவரது மகள்கள் காசோலையை நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு காவல்துறை மற்றும் 1997 ஆம் ஆண்டு பேட்ச் காவல் குழுவினருக்கு நன்றி கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.