உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய மதுரை போக்குவரத்து காவலர்கள்
நேற்று 21ம் தேதி காலை மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பழனியை சேர்ந்த ஒரு பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் உள்நோயாளியாகஉள்ள ஒருவருக்கு டிரான்ஸ் ப்ளான்டேஷன் செய்வதற்காக மதியம் 12.57 மணிக்கு மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 13.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தது. இதற்காக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திரு. சுகுமாரன் அவர்கள் தலைமையில் காவல் உதவி ஆணையர்கள் திரு. திருமலைக்குமார் அவர்கள், திரு. மாரியப்பன் அவர்கள், மற்றும் காவல் ஆய்வாளர்கள் திரு. ராஜேஷ் அவர்கள், திரு. கனேஷ்ராம் அவர்கள், திரு. சுரேஷ் அவர்கள், மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் எந்த இடத்திலும் நிற்காமல் செல்வதற்காக Green corridor போக்குவரத்து ஏற்பாடுகளை செய்தும் 13 நிமிடத்திற்குள் விமானநிலையத்தை சென்றடைந்தது.
