வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு?
தமிழக காவல்துறைக்கு பேருதவியாக செயல்பட்டு வரும் ஊர் காவல் படை வீரர்கள் 16000 பேருக்கும் மேற்பட்டோர் ஊர் காவல் படை வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ரூ.65/− வீதம் என இருந்ததை 2012 ம் ஆண்டில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் நாள் ஒன்றுக்கு ரூ.150/− என ஊதியத்தை உயர்த்தி மாதம் முழுவதும் 30 நாளும் வேலை கொடுத்ததால் மாதம் ஒன்றுக்கு ரூ.4500/− கிடைத்தது. எனவே இந்திய உச்ச நீதிமன்ற ஆணையின்படி நாள் ஒன்றுக்கு ரூ.560, என ஊதியத்தை உயர்த்தை உயர்த்தி விட்டு தமிழக அரசு மாதம் முழுவதும் 30 நாள் வழங்கிய வேலையை திடீரென மாதத்தில் 5 நாள் மட்டும் வேலை என அறிவித்துள்ளதால் மாதம் ஒன்றுக்கு ரூ 2800/= மட்டுமே மாத ஊதியம் கிடைத்து வருகின்றது இந்த சொற்ப ஊதியத்தையும் பொருட்படுத்தாமல் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். உச்ச நீதிமன்றம் GO.MS.No.703 Home Police14 dt 15.09.2017 உத்தரவுப்படி மற்ற மாநிலங்களில் டெல்லி, பீகார், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், போபால், நேப்பாளம், கேரளம், பாண்டிச்சேரி, கர்நாடகம், போன்ற மாநிலங்களில் ஊர் காவல் படை வீரர்களுக்கு, பணி நாட்களை உயர்த்தி நிரந்தரம் செய்து மாத ஊதியம் ரூ. 15000/−, 20,000/− வழங்குவது போல் தமிழ் நாட்டில் உள்ள ஊர் காவல் படை வீரர்களை ஆதரிக்கும் வகையில் பணி நாட்களை உயரத்தி மாதம் முழுவதும் வேலை கிடைக்கவும், ஒவ்வொரு மாத சம்பளத்தையும் அந்த மாத இறுதியில் கிடைக்க வழிவகை செய்து தர தமிழக அரசு உதவி புரிய வேண்டும்.
