காவல்துறையை பற்றி தெரிந்து கொள்வோம்
காவல்துறை என்பது சுத்தமான தமிழ் சொல், அப்போ Police என்பது ஆங்கில சொல்லா என்றால் இல்லை அது பண்டைய கிரேக்க மொழி சொல். போலீஸ் என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இவற்றின் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தல், குற்றவிசாரணை புரிதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற பணிகளும் இத்துறையால் செய்யப்படும். இவ்வமைப்பின் அதிகாரவரம்பு நாட்டுக்கு நாடு வேறுபடும். பொதுவாக தேசிய எல்லை, மாநில எல்லை, மற்றும் சர்வதேச அளவிலும் என்று வகைப்படுத்திப் பிரிக்கலாம். காப்பது கடவுள் என்றார் காக்கியும் கடவுள்தான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெருமை பெற்ற, மற்றும் தியாக உள்ளம் கொண்ட காவல்துறைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் மதிப்போ ஜீரோதான். இந்த ஜீரோ இல்லையென்றால் கணிதத்திற்கு மதிப்பில்லை, இந்த காக்கி இல்லையென்றால் பொதுமக்களுக்கு நிம்மதியில்லை, எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சிறு சிறு தவறுகளை பூதகரமாக ஒருசில ஊடகங்கள் பதிவிடுவதால்தான் காவலர்களுக்கு மக்கள் மத்தியில் மரியாதை குறைந்து வருகிறது. இதை தவிர்த்து அவர்களின் தன்னலமற்ற தியாம் நிறைந்த உழைப்பை மக்களுக்கு உணர்த்தும் வகையில் நமது செய்திகள் இருக்க வேண்டும்