தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மாதவரம் காவல் மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது
வருகிற 06/04/2021, அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களின் உத்தரவின்படி சென்னை பெருநகர நகரில் உள்ள வாக்குச் சாவடிகளில் மற்றும் வாக்கும் எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் வாக்குச் சாவடிகள், மிண்ணனு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களான பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு சென்று ஆய்வு செய்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திட சென்னையில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைகளிலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவ படையினர் ஒருங்கிணைந்து முக்கிய மக்கள் கூடும் , வசிப்பிடப் பகுதிகளில் காவல் கொடி அணிவப்பு நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 17 ம் தேதி காலை மாதவரம் காவல் மாவட்டத்தில் காவல் துணை ஆணையாளர் திரு கிருஷ்ணராஜ் IPS அவர்கள் தலைமையில் காவல் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், மற்றும் துணை ராணுவப்படையினருடன் காவல் கொடி அணிவகுப்பு ரெட்டேரி சந்திப்பில் ஆரம்பித்து வினாயகபுரம் வழியாக புழல் காவல் நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.