
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் குற்றம் மற்றும் போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வழங்கிய ஏ.எஸ்.பி.
இலங்கை தமிழர் குடியிருப்பு பவானிசாகரில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் MS. ஐமன் ஜமால் ஏ எஸ் பி
அவர்கள் இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார்.
மக்களிடம் நேரடியாக உரையாடினார் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
அவர்களினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய விளக்கங்களையும்.
அவர்களால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் பற்றியும்.
தவறான பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
பவானிசாகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உயர்திரு பிரபாகரன் இன்ஸ்பெக்டர் மற்றும் பூர்ண சந்திரன் எஸ்ஐ அவர்களிடம் விளக்கங்கள் கேட்டு பிரச்சினையில் இருந்து மக்களை பாதுகாக்கவும் அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மற்றும் பாதுகாப்பற்று இருக்கக்கூடிய இடங்களை கவனத்தில் கொண்டு இளைஞர்கள் மறைந்திருந்து போதை பழக்கத்திற்கு பயன்படுத்தும் கட்டிடங்களை அரசு அனுமதி உடன் இடித்து சுத்தப்படுத்தும் படி கேட்டுக் கொண்டார்.
மற்றும் வயதான மூதாட்டியின் பெட்டி கடைக்கு சென்று இளைஞர்கள் இங்கு வந்து சண்டை ஏதும் செய்தால் உடனடியாக தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
மற்றும் அமைதியான சூழலையும் பாதுகாப்பான வாழ்வியலையும் நல்ல பழக்க வழக்கங்களையும் நெறிமுறைகளையும் கடைபிடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
குற்றவாளிகளை அடையாளம் காட்டி காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் படியும் எந்த நேரத்திலும் காவல் நிலையத்திலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.
இருட்டான பகுதிகளில் விளக்கு கம்பங்களை அமைக்கவும் மறைவான இடங்களில் கண்காணிப்பு புகைப்பட கருவிகளை பொருத்தவும் நிகழ்வுகள் நடைபெறும் என்றார்.

