சென்னை ராயப்பேட்டையில் சரக்கு வாகனத்தைத் திருடியது தொடர்பாக கும்பகோணத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயப்பேட்டையில் உள்ள எம்.ஆர்.பி. டூல்ஸ் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் காணாமல் போனது. இப்பகுதி கண்காணிப்புக் காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அடுக்கு மாடிக் குடியிருப்பின் முன்னாள் காவலாளியான ஜெகதீசன் என்பவர் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ஜெகதீசனினின் செல்ஃபோன் சிக்னல்களை ஆய்வு செய்த போது அவர் கும்பகோணத்தில் இருந்தது தெரியவந்தது. கும்பகோணத்தில் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த ஜெகதீசனையும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் கைது செய்த்னர். விசாரணையில் அவர்கள் சரக்கு வாகனத்தை திருவண்ணமலை அருகே ஒரு கிராமத்தில் விட்டிருந்தது தெரியவந்ததையடுத்து அங்கு சென்று போலீசார் வாகனத்தை மீட்டனர்.