ஏழை, எளிய மக்களுக்கு, பசி போக்க உணவளித்து வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதில் ஒரு பகுதியாக ஊரடங்கை மீண்டும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்துள்ளது, இந்த நீட்டிப்பு ஏழை எளிய மக்கள் வாழ்வதாரத்தை பாதித்த போதும் நோய் தொற்று சங்கிலியை உடைத்தெரிந்து மக்களை காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை இந்த கசப்பான மருந்தை கொடுத்துதான் மக்களை காப்பாற்ற வேண்டிய நிரபந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் வருமானமின்றி உணவுக்கு தவிக்கும் ஏழை எளிய மக்கள் இரவு படுக்கப் போகும் போது பட்டினியாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி அவர்கள், திருத்தங்கல் நின்ற பெருமாள் சன்னதி சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு அப்பகுதில் உள்ள சில சமூக ஆர்வளர்களுடன் இணைந்து தினமும் இரவு நேர உணவு வழங்கி வருகிறார், மேலும் கொரோனா நோய் பற்றியும் அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளுவது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி அவர்களின் தொண்டை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.