கவச உடையுடன் மக்களை சாலை விபத்தில் இருந்து மீட்க போக்குவரத்து காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நவீன பாதுகாப்பான செயல் முறைகள்.
( Assistant Commissioner of police .)(Traffic Adyar )திரு.D.JOSEPH அவர்கள்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை தடுக்கவும் மற்றும் விலை மதிக்க முடியாத உயிர்பலி களை தடுக்கவும் திரு .சங்கர் ஜிவால் இ.கா.ப காவல் ஆணையாளர் சென்னை பெருநகரம் அவர்களின் ஆணையின்படி திரு .பிரதீப் குமார் காவல் கூடுதல் ஆணையாளர் போக்குவரத்து சென்னை பெருநகரம் அவர்களின் அறிவுரைகளையும் படியும் திருமதி .P.K.செந்தில்குமாரி IPS காவல் இணை ஆணையாளர் போக்குவரத்து தெற்கு மண்டலம் அவர்களின் கண்காணிப்பிலும் திரு .N. குமார் காவல் துணை ஆணையாளர் போக்குவரத்து தெற்கு மாவட்டம் அவர்களின் சீரிய ஏற்பாட்டின்படி திரு .ஜோசப் உதவி ஆணையாளர் போக்குவரத்து அடையாறு உட்கோட்டம் அவர்களின் தலைமையிலும் மற்றும் திரு .குமார் ஆய்வாளர் J8 நீலாங்கரை போக்குவரத்து காவல் நிலையம் அவர்களின் முன்னிலையில் 18 6 2021 ம் தேதி இரவு 21.00 மணி முதல் 3 மணி வரை மேற்கண்ட சாலையில் உள்ள அக்கரை( ECR)சந்திப்பில் சாலையின் குறுக்கே பிரதிபலிப்பு தடுப்புகள் பிரதிபலிப்பு விளக்குகள் வைத்தும் மற்றும் சரியான சமூக இடைவெளியுடன் நீண்ட குச்சியின் முகப்பில் Breathing Analyzer வைத்து குடிபோதையில் வாகனங்களை ஓட்டிவந்த வாகன ஓட்டிகளிடம் Straw மூலம் ஊதா செய்து குடிபோதையில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களின் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது .அதன் பின்னர் அவர்களுடைய வாகனங்களை தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்களை அக்கரையில் உள்ள ஜன ராஜ் திருமண மண்டபத்தில் நிறுத்தி பத்திரமாக வைக்கப்பட்டது .அதன்பின்னர் குடிபோதையில் ஈடுபட்டவர்களை Call Taxi வரவழைத்து பத்திரமாக அவர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி சென்னை பெருநகர போக்குவரத்து தெற்கு மண்டலம் காவல்துறையினர் இரவு பகல் பாராமல் கொரோனா ஊரடங்கில் மக்களை பாதுகாத்தது போல சாலை விபத்துகள் நேரிடாமல் மக்களை பாதுகாக்க பல் வேறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்கள் உயிரையும் பாதுகாத்து கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர்