Police Department News

தந்தைக்கு கொரோனா என பயந்து சாலையில் மகனே வீசி சென்ற கொடுமை

தந்தைக்கு கொரோனா என பயந்து சாலையில் மகனே வீசி சென்ற கொடுமை

கடந்த 14 ம் தேதி ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மற்றும் மனநலம் பாதித்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர்களுக்கு ஆதரவளித்து வரும் திருவாதவூரில் உள்ள நியூ கிரியேசன்ஸ் டரஸ்ட், நிறுவனர் திருமதி. குளோரி டெபோரா அவர்கள் தன் சொந்த வேலை விசயமாக மதுரை மெஜுரா கோட்ஸ் பாலத்தின் வழியாக வரும்போது அங்கே ஒரு முதியவர் நோய்வாய் பட்டநிலையில் மதுரை மெஜூரா கோட்ஸ் பாலத்தில் சுடலைமாடசாமி கோவில் அருகே படுத்து கிடந்ததை கண்டு அவரைப் பற்றி அக்கம் பக்கம் விசாரித்த போது அவர் கடந்த ஒரு மாத காலமாக அங்கேயேதான் இருப்பதாக கூறியுள்ளனர்,அந்த முதியவரை மீட்க்கும் பொருட்டு வழக்கறிஞர் மகாராஜன் அந்த பகுதி மக்கள் மற்றும் திருமதி.குளோரி டெபோரா அவர்கள் கொடுத்த தகவலின்படி துரிதமாக செயல்பட்டார், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அனிஷ் சேகர் அவர்களின் உத்தரவின்படி ரெட் கிராஸ் பேரிடர் மேலான்மை மீட்பு குழுவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ராஜ்குமார், மாரியப்பன் மற்றும் வழக்கறிஞர் முத்துகுமார் ஆகியோர் நேரில் சென்று அந்த முதியவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள் உடல் முழுவதும் கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவரிடம் விசாரித்த போது இவர் மதுரை மேலமாசி வீதியை சேர்ந்தவர் எனவும் கருப்பத்தேவர் மகன் லக்ஷ்மணன் எனவும் கூறினார். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு எழுதிக்கொடுக்கும் வேலை பார்த்து வந்ததாகவும், தொடர்ந்து இருமல் சளி காய்ச்சல் இருந்ததால் எழுந்து நடக்கமுடியாத சூழ்நிலையில் கொரோனா நோய் தொற்று இருக்குமோ என பயந்து தனது மகன் ஆட்டோவில் கொண்டு வந்து அங்கே விட்டுவிட்டு சென்றதாக கண்ணீர் மல்க கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.