மதுரையில் திருட்டுப்போன ரூபாய் 16,00000/=மதிப்பிலான செல் போன், லேப்டாப், இரு சக்கர வாகனங்கள், மீட்பு, உரிமையாளர்களிடம் பொருட்கள் ஒப்படைப்பு
மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாக வீட்டின் முன்பும், கடைகள் முன்பும் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கள்கள் திருடப்பட்டு வந்தன்.இது குறித்து நகரில் உள்ள பல் வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. எனவே மோட்டார் சைக்கிள்களை திருடுபவர்களை உடனடியாக கண்டுபிடிக்கும்மாறு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேமானந்தசின்ஹா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் குற்றப்பிரிவு துணை ஆணையர் திரு. ராஜசேகரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் ரமேஷ், ரவி, ரவீந்திர பிரகாஷ், மற்றும் காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 11 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அதே போல் நகரில் பஸ் மற்றும் பல்வேறு இடங்களில் தொலைந்து போன செல் போன்கள், மற்றும் வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு அதிக புகார்கள் வந்தன. அந்த செல்போன்களை வழிப்பறி செய்த குற்றவாளிகளை கண்டிபிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் தொலைந்த வழிப்பறி செய்யப்பட்ட 108 செல் போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட செல் போன்கள், மோட்டார் சைக்கிள், மடிகணினி, ஆகியவற்றை அந்த பொருட்களுக்கு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கூடல்நகர் D3, காவல் நிலையத்தில் நேற்று 22 ம் தேதி நடந்தது. இதில் குற்றப்பிரிவு துணை ஆணையர் திரு. ராஜசேகர் அவர்கள் கைப்பற்றப்பட்ட 108 செல் போன்கள், 11 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மடிகணினி ஆகியவற்றை உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் கூடல்புதூர் D3, காவல்நிலைய ஆய்வாளர் திரு. ஆறுமுகம், மற்றும் B1, B2, B3, B4, B5, B6, V1, V2, C1, C2, W1, ஆகிய காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், மற்றும் தலைமை காவலர்கள், I.S பிரிவு செல்வகுமார் மற்றும் காவல் ஆளீநர்கள் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் துணை ஆணையர் அவர்கள் கூறும் போது மதுரை மாநகரில் செல் போன் திருடிய பலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து செல் போன்களை பறிமுதல் செய்துள்ளோம்.அதே போன்று பல் வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியவர்களை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். அவர்களிடமிருந்து தற்போது 11 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் திருட்டு சம்பவங்களை தடுக்க தங்கள் வீடு உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைப்பதன் மூலம் திருட்டுகளை தடுக்க முடியும். மேலும் பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்தால் அவர்களின் வீடு போலீசாரால் கண்காணிக்கப்படும் என்றார்.