
இன்று (10-10-2021) காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் வர்த்தகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
- தீபாவளி விற்பனையினை மனதில் வைத்து பொது ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. உதாரணமாக (ரோடு வரை செட் போடுவதால் போக்குவரத்திற்கு இடையூறு அதிகமாக இருக்கிறது) எனவே கடைக்கு முன்னால் செட் போடும் வியாபாரிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போட வேண்டும். மீறினால் காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
- பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
3.மேலும் தீபாவளி கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கக் கூடாது. அனைவரும் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே கடைகளுக்குள் அனுமதிக்க வேண்டும். ஜவுளிக் கடை மற்றும் கூட்டம் அதிகமாக கூடும் கடைகளில் கண்டிப்பாக வெளியில் ஒரு காவலரை நியமித்து 20 நபர்கள் மட்டுமே அனுமதித்து அவர்கள் வெளியே வந்தவுடன் மற்ற நபர்களை அனுமதிக்குமாறும் கூறியுள்ளார்.இதனை மீறினால் காவல் துறை மூலம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் கடைகளுக்கு வரும் சந்தேக நபர்கள் குறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
வியாபாரிகள் அனைவரும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என வர்த்தகர் சங்கத்தின் சார்பாக தெரிவித்தனர்.
