Police Department News

இத்தனை குறைகளுடன் எப்படித்தான் வசிப்பதோ 18 வது வார்டு மக்கள் புலம்பல் விரைவில் தீர்வு கிடைக்கும் வார்ட்டு கௌன்சிலர் வாக்குறிதி

இத்தனை குறைகளுடன் எப்படித்தான் வசிப்பதோ 18 வது வார்டு மக்கள் புலம்பல் விரைவில் தீர்வு கிடைக்கும் வார்ட்டு கௌன்சிலர் வாக்குறிதி

பாதாள சாக்கடை குடிநீர் இணைப்புக்காக தோண்டிய குழிகள் சீரமைக்கப்படாததால் ரோடுகள் குண்டும் குழியுமாக மாறி மழை காலங்களில் போக்குவரத்துக்கு தகுதியற்ற ரோடுகளாக உள்ளன. சாக்கடை வசதியின்றி கழிவு நீர் வீட்டின் முன்பு தேங்கி நிற்கிறது என வசிக்க தகுதியற்றதாக 18 வது வார்ட்டு உள்ளது என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

தகுதியற்ற ரோடுகள்

மணி எஸ். ஆலங்குளம் :

மாநகராட்சியிலிருந்து பாதாள சாக்கடை குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகள் பல நாட்களாக சீரமைக்கவில்லை இதனால் ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக கிடக்கிறது. மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுவதால் ரோடுகள் போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிடுகிறது. கழிவு நீர் செல்ல வழியின்று வீடுகளின் முன்பு தேங்குவதால் அதில்தான் நடந்து செல்ல வேண்டியதுள்ளது கண்டகண்ட இடங்களில் குப்பையை கொட்டி எரிக்கின்றனர் குப்பை தொட்டிகளை போக்குவரத்திற்கு இடையூறாக வைத்துள்ளனர். ஜெயம் நகர் பகுதியில் ரோடுகளை சாக்கடை கழிவுகள் ஆக்கரமித்துள்ளன.

இருளில் தவிக்கிறோம்.

பாலசுப்பிரமணியம் சாஸ்தா நகர்:

தெருக்களில் மின் விளக்குகளின் வெளிச்சம் போதுமானதாக இல்லை சில சமயங்களில் விளக்குகள் பகலிலும் ஒளிர்கின்றன. மின் கம்பங்களுக்குள் உள்ள இடைவெளியை குறைத்து புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் இருள் மிகுந்த பகுதிகளில் சமூக விரோதிகளின் செயல்பாடுகள் உள்ளன. எனவே இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் தனியாக செல்ல பயப்படுகின்றனர். வார்டில் நாய்கள் பன்றிகள் கொசுக்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது மழை காலத்தில் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.

விரைவில் தீர்வு கிடைக்கும்

கௌன்சிலர் நவநீத கி.ருஷ்ணன்:

மாநகராட்சி 18 வது வார்டில் உள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும் அலமேலு நகர் முனியாண்டி கோவில் தெரு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து இணைப்புகள் வழங்ப்படும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ரோடு சீரமைப்பு பணிகள் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன ஆபிசர் டவுன் பகுதிகளில் சாலை பணிகள் முடியும் நிலையில் உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி. தினமலர்

Leave a Reply

Your email address will not be published.