மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில் நேற்று மாலை சரகத்திற்கு உட்பட்ட பழைய இரும்பு சாமான்கள் வாங்கும் கடைகார்கள்,பழைய இருசக்கர வாகனத்தை வாங்கி விற்பனை செய்பவர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள் கெமிக்கல்ஸ் மற்றும் வெடி பொருட்கள் விற்பனையாளர்கள் ,லாரி செட் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த சுமார் 50 பேர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு காவல் ஆய்வாளர் முத்து பிரேம் சந்த் தலைமையில் நடைபெற்றது.
தாங்கள் எந்த ஒரு விற்பனையோ அல்லது வியாபாரமோ நடந்தாலும் பொறுப்புடன்,சட்ட விதிகளின்படி செயல்படவேண்டும்.
ஏதும் குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க காவல் துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.
இதில் உதவி ஆய்வாளர்கள் முருகன்,சோமு, முருகேசன், ராமலிங்கம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.