கோவையில் மூதாட்டி கொலை வழக்கை துரித விசாரணை செய்யாத ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து மாநகர ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றியவர் செந்தில்குமார். கடந்த ஜீன் மாதம் கோவை ம.ந.க வீதியில் ரங்கநாயகி (71) என்ற மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய கணவர் சுப்பிரமணி கடைக்கு சென்ற சில மணி நேரத்திற்குள் மனைவி இறந்தது குறித்து வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது ஆய்வாளர் செந்தில்குமார் சாதாரண வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் ரங்கநாயகி கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.
கொலை என தெரிந்த பின்னரும் ஆய்வாளர் , இவ்வழக்கை திவீரமாக விசாரிக்காமல், குற்றவாளிகளையும் கைது செய்யாமல், இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் சாதாரண வழக்கிலிருந்து கொலை வழக்காக மாற்றி நேரடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும், ரங்கநாயகி கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் செந்தில்குமார் மீது , துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி , மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரணுக்கு அறிக்கை சமர்பித்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆய்வாளர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து இன்று ஆணையர் உத்திரவிட்டார்.
ஏற்கனவே ஆய்வாளர் செந்தில்குமார் மீது வட மாநிலத்தை சேர்ந்த பவானி , என்பவர் தங்கியிருந்த அறையில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டக்களை பறிமுதல் செய்துள்ளார். அப்போது குற்றவாளி தப்பியோடி விட்டார். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டக்கள் குறித்து மேலாதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவில்லை என்பதற்காக ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.