பாலக்கோடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் மே தினவிழா- இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் மே தினவிழா சங்கதலைவரும்,மாநில துணை பொது செயலாளருமான வடிவேல் தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி கலந்து கொண்டார். மேலும் எம்.ஜி.ரோடு, பேருந்து நிலையம், தருமபுரி சாலை உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். மே 1-ம் தேதியான இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, இந்த நாட்டுக்காக உழைக்கும் தொழிலாளர்களின் மேன்மையை உலகறிந்த நாளாகவும், அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்த நாளில் கல்லுடைக்கும் தொழிலாளி முதல் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை செங்குருதியை வியர்வையாக்கி, உழைப்பையே மூச்சாக சுவாசித்து, தேசத்தின் பொருளாதாரத்தை தூக்கிப் பிடிக்கும் தொழிலாளர்கள் என்று சிறப்பு உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் மகேந்திரன், துணை தலைவர் சங்கரன், மாதேஷ், ராமகிருஷ்ணன் சங்கர்
மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.