Police Department News

தென்காசியில் ரசாயன ஊசி செலுத்தி பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ தர்பூசணி பழங்கள் அழிப்பு – உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை

தென்காசியில் ரசாயன ஊசி செலுத்தி பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ தர்பூசணி பழங்கள் அழிப்பு – உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடையில் இயற்கைக்கு மாறாக அமில ஊசி செலுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்ப னை செய்யப்படு வதாகவும், இதை பொது மக்கள் உண்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் இணையதளம் மூலம் ஒருவர் உணவு பாது காப்புத்துறை அதிகாரிக்கு புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் தென்காசி ஊராட்சி ஒன்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிரமணியம் தென்காசி-மதுரை நெடுஞ்சாலையின் ஓரமாக குத்துக்க ல்வலசை பகுதியில் செயல் பட்டு வரும் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடையில் திடீர் ஆய்வு நடத்தினார்.

ஆய்வின் போது அந்த கடையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தர்பூசணி பழங்கள் அனைத்தும் இயற்கைக்கு மாறாக செயற்கையான முறையில் அமிலத்தை ஊசி மூலம் செலுத்தி பழுக்க வைக்கப்பட்டது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அங்கு இருந்த சுமார் 100 கிலோ தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனர்.

தற்போது கோடை காலம் என்பதால் ஏராள மான பொதுமக்கள் தண்ணீர் சத்து மிகுந்த தர்பூசணி பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உண்பது வழக்கம். பொதுமக்கள் விரும்பி உண்ணும் இந்த தர்பூசணி பழங்களில் அமிலத்தை ஊசி மூலம் செலுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் அமிலம் செலுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.