Police Recruitment

சாலை விதிகளை பின்பற்றி மாணவர்கள் சைக்கிள்களை இயக்க வேண்டும்-அமைச்சர் பேச்சு

சாலை விதிகளை பின்பற்றி மாணவர்கள் சைக்கிள்களை இயக்க வேண்டும்-அமைச்சர் பேச்சு

சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவி களுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

விலையில்லா சைக்கிள் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 2022-23ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவி களுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் அடிப் படையில் மாவட்டத்திலுள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4,270 மாண வர்கள் மற்றும் 6,323 மாணவிகள் என 10 ஆயிரத்து 593 மாணவர் ளுகக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் மாணவிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 760 மதிப்பீட்டிலும் மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் 900 மதிப்பீட்டிலும் என சைக்கிள்கள் வழங்கப் பட உள்ளன.

அதன் தொடக்கமாக இன்றைய தினம் சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 210 மாணவிகளுக்கு ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

சூற்றுச்சூழலை பாது காப்பதற்கும் அடிப்படை யாக சைக்கிள்கள் விளங்கி வருகிறது. இன்றைய தினம் இந்நிகழ்ச்சிகளின் மூலம் விலையில்லா சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர் கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி, முறையாக சைக்கிள்களை ஓட்ட வேண்டும்.

இதுபோன்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவர்கள் திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ் குமார், விஜயகுமார், பள்ளி தலைமையாசிரியை சிவமணி, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.