Police Department News

போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர ஆக்‌ஷனை கையில் எடுத்துள்ளது.

போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர ஆக்‌ஷனை கையில் எடுத்துள்ளது.

போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர ஆக்‌ஷனை கையில் எடுத்துள்ளது. கையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிகளவில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. காவல்துறையினர், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனையின் படி ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களில் பல இடங்களில் டன் கணக்கில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூரில் குட்காவை பதுக்கி வைத்திருந்த குடோனில் இருந்து சுமார் 2 ஆயிரம் கிலோ குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து சென்னை முழுவதும் பல இடங்களுக்கு குட்கா சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில், குடோனை சீல் வைத்துள்ளனர் சென்னை போலீசார்.

தொடர்ச்சியாக, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்கவும், பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்கவும் சென்னை மாநகர போலீசார் ஆக்‌ஷனை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் குட்கா வாங்கிய கடைகள் தொடங்கி, மொத்த விற்பனை செய்த இடம், குடோன் வரை கூண்டோடு சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கஞ்சாவை தொடர்ந்து குட்கா, பான் மசாலா, கூல் லிப் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நாட்களில் போதைப் பொருள் தடுப்பு வேட்டை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த சென்னை போலீசார் எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு தமிழக மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.