
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டவரை சுற்றி வளைத்து கைது செய்யும் காவல்துறை, பரப்பரப்பான சிசிடிவி காட்சிகள்
மதுரை டி.எம்.நகரில் வசிக்கும் அபிராமி என்பவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார், பிப்ரவரி 7 ஆம் தேதி பகல் 12 மணியளவில் பணிக்காக புறப்பட்டு கொண்டிருந்த போது வீட்டு வாசலில் மர்ம நபர் ஒருவர் நின்றதாகவும், பயந்து கொண்டு வீட்டு பின்புறம் சென்ற போது அந்த நபர் கத்தியை காட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடி விட்டதாகவும் கோ.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
இதனையடுத்து கோ.புதூர் காவல் நிலைய தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்
கத்தியை காட்டி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் சின்ன மங்கலக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் என தெரியவந்தது, இதனையடுத்து சுரேஷ்குமாரை தேடிய போது ஒத்தக்கடையில் உள்ள மொபைல் கடையில் சிம் கார்டு வாங்கி கொண்டிருந்த சுரேஷ்குமாரை காவல்துறை சுற்றி வளைத்தது
ஆனால், காவல்துறை பிடியில் இருந்து சுரேஷ்குமார் தப்பியோடினார், காவல்துறையினர் சுற்றி வளைத்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்
சுரேஷ்குமாரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
