Police Recruitment

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

ரூபாய் 30 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
மதுரை, மார்ச் 16
மதுரை மாவட்டம் சக்கியமங்கலம் பகுதியில் உள்ள சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் உள்ளது.
அதன் அருகே உள்ள வயலில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தொடர்ந்து அருகில் இருந்த பிளாஸ்டிக் குடோனிலும்தீப்பற்றிஎரிய தொடங்கியது.
அங்கு இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு
தகவல் கொடுத்தனர்.

மதுரை விருந்து தீயணைப்பு துறையினர் உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் குடோன் முழுவதும் தீமளமளவென பரவியது.
இதில் குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
அதன் மதிப்பு சுமார் ரூபாய் 30 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது, இதுகுறித்து சுலைமான் போலீசார் வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.