கண் பரிசோதனை முகாமில் 59 நபர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான கண் பரிசோதனை முகாம் 03.02.2020-ம் தேதியன்று நடைபெற்றது. இம்முகாமில் சிறு குறைபாடுகள் இருந்த 59 வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாகன ஓட்டிகள் உயிரின் மதிப்பை உணர்ந்து போக்குவரத்து, சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்றி செயல்பட வேண்டும். ஓர் உயிர் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்