போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்
இன்று (15.02.2020) சென்னை கண்ணகி நகரில் காவல்துறையுடன் இணைந்து ஸ்ரீ கிளினிக் மருத்துவமனை மற்றும் செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவர்கள் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் போதை தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ரியாஸீதின் மற்றும் ஜே 11 கண்ணகி நகர் காவல்நிலை ஆய்வாளர் திரு. வீரக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இம்முகாமில் போதை பொருட்கள் உபயோகத்தின் தீமைகள் குறித்து விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.