மதுரை, செல்லூர் தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்பனை, இருவர் கைது
மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முத்துகாமாக்ஷி அவர்கள் காவல்நிலைய அலுவலில், நிலையத்தில் கடந்த 17 ம் தேதி மதியம் சுமார் 3 மணியளவில் ஆஜரில் இருந்த சமயம் அவரின் ரகசிய தகவலாளி ஒருவர் கொடுத்த கஞ்சா விற்பனை பற்றி தகவலின்படி, மேற்படி தகவலை ஆய்வாளர் திரு. அழகர் அவர்களுக்கு தெரிவித்து அவரின் உத்தரவின்படி சக காவலர்கள் த.க.3380, திரு.செந்தில்பாண்டியன், மு.நி.க.2395, திரு.சிலம்பரசன், ஆகியோருடன் போதை பொருள் சம்பந்தமாக தேவைப்படும் உபகரணக்களுடன் புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு மதுரை தத்தனேரி மயானத்திற்கு சென்ற போது போலீசாரை பார்த்ததும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தவர்கள் தப்பியோட எத்தனித்னர், உடனே காவலர்கள் அவர்களை வளைத்து பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் மதுரை, காமராஜர்புரம், சின்னக்கண்மாய் தெருவை சேர்ந்த குமார் மகன் முத்துப்பாண்டி வயது 24/21, மதுரை, அலங்காநல்லூர், கல்லனை, நேதாஜி நகர், நேரு நகரைச்சேர்ந்த பொண்ணுச்சாமி மகன் சங்கர் வயது 22/21, என தெரிய வந்தது, காவலர்கள், அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை கைபற்றி காவல் நிலையம் அழைத்து வந்து சார்பு ஆய்வாளர் திரு முத்துக்காமாக்ஷி அவர்கள் வழக்கு பதிவு செய்து, ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் விசாரணை நடத்தி அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்னர் அங்கு நீதி மன்ற உத்தரவின்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.