விசாரணை கைதி தப்பியோட்டம் 3 காவலர்கள் பனியிடை நீக்கம்..! நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி வெங்கடேசன் என்பவர் ஹோட்டலில் சாப்பிடும் போது காஞ்சிபுரம் ஆயுதப்படை காவலர் ராஜா என்பவரை ஏமாற்றித் தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்த நான்கு காவலர்கள் ராஜா, புஷ்பராணி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பரந்தாமன் ஆகியோரையும் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி தேன்மொழி பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Author: policeenews
_*வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
_*வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது*_ _திருப்பூர் மாநகரில் தனியாக செல்லும் நபரிடம் மர்ம ஆசாமிகள் மிரட்டி செல்போன்களை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் *உயர்திரு.சஞ்சய்குமார் (இ கா ப)* அவர்களின் உத்தரவின் பெயரில் மாநகர துணை ஆணையர் *உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப)* அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநகர வடக்கு உதவி ஆணையர் திரு.வெற்றிவேந்தன் அவர்களின் மேற்பார்வையில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் […]
போலி பீடி தயாரித்தவர் கைது
போலி பீடி தயாரித்தவர் கைது திருப்பூர் அனுப்பர்பாளையம் சுற்றுவட்டார கடைகளுக்கு தங்கள் நிறுவன பெயர்கொண்ட பீடிகளை ஒரு சிலர் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக கோவை நூர்செட் பீடி மேலாளர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் திரு.ராஜன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.விசாரணையின் போது ஒரு சில கடைகளில் போலியான நூர்செட் பிடி இருப்பது தெரியவந்தது.பின்னர் அந்த கடைகளுக்கு சப்ளை செய்யும் நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம் […]
டிக் டாக்கில் ஆபாச விடியோ வாலிபர் கைது..!!
டிக் டாக்கில் ஆபாச விடியோ வாலிபர் கைது..!! தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரம் கூலிபத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கண்ணன் (19). தனியார் கல்லூரி மாணவரான இவர், சமீபகாலமாக டிக் டாக்கில் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி வந்தார். இந்நிலையில் அவர், டிக் டாக்கில் ஆபாசமாக பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சேர்ந்தமரம் எஸ்ஐ தினேஷ்பாபு தலைமையிலான போலீசார், இன்று கண்ணனை கைது செய்தனர்.
குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்
குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று 2.3.2020. தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் சந்தித்து அரியானா மாநிலத்தில் நடைபெற்ற 38 ஆவது அகில இந்திய அளவிலான குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வென்ற ஒரு சுழல் கோப்பை […]
துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.!!
துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.!! சிவகங்கை ஆயுதப்படை காவலர் திரு.யோகேஷ்வரன் என்பவா் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி காப்பு பணியில் கழிவறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் காவலர் பலி..!!
வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் காவலர் பலி..!! மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தஞ்சை ஆயுதப்படை 2018 பேஜ் காவலர் காளிமுத்து ( எ) தினேஷ் இன்று காலை வெந்நீர் வைத்தபோது வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெசண்ட் நகர் கடற்கரை தஞ்சாவூர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் தனது எட்டு மாத குழந்தையுடன் கடற்கரை ஓர நடைபாதையில் உறங்குகின்றனர்
பெசண்ட் நகர் கடற்கரை தஞ்சாவூர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் தனது எட்டு மாத குழந்தையுடன் கடற்கரை ஓர நடைபாதையில் உறங்குகின்றனர். திடீரென்று தாய் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த கணம் அருகிலிருந்த தன் குழந்தையை காணாததால் பெரும் பதட்டதிற்குள்ளாகிறார். உடனே தன் கணவனை எழுப்பிவிட்டு கடற்கரை அருகிலுள்ள பகுதிகள் முழுவதும் தேடுகின்றனர். மனம் வெதும்பி கடைசியில் அரக்கபரக்க அருகிலுள்ள காவல்நிலையத்தில் கண்ணீருடன் ஓடி நடந்த விவரத்தை கூறுகின்றனர். விவரத்தை பெற்ற காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு […]
கடம்போடுவாழ்வு பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெண்களிடம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி வேலம்மாள் அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
கடம்போடுவாழ்வு பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெண்களிடம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி வேலம்மாள் அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடம்போடுவால்வு பேருந்து நிறுத்ததில் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. வேலம்மாள்அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது என ஆலோசனை வழங்கி, பெண்கள் தங்கள் […]
பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் ‘சிந்தனை நாள்” விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் ‘சிந்தனை நாள்” விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, அதன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பாரத சாரண, சாரணியர் இயக்கத்தை 1909ம் ஆண்டு திரு.பேடன் பவுல் என்பவர் தொடங்கினார். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் சாரண, சாரணியர்களின் நற்பண்புகளை வளர்த்தல், சமூக சேவையாற்றுவது போன்றதாகும். இவர் 22.02.1857 அன்று பிறந்தார். ஆகவே பாரத சாரண, சாரணியர் […]









