ஃபேஸ்புக்கில் அறிமுகம்; போலீஸ் வேடத்தில் பணம்பறிப்பு!-ஆந்திர வியாபாரியைக் கிறங்கடித்த வேலூர் கும்பல் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான ஆந்திர வியாபாரியைத் திட்டமிட்டு வேலூர் வரவழைத்து, ஐந்து லட்சம் ரூபாயை போலீஸ் வேடத்தில் பறித்த மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர். ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் நேசக்குமார் (42), வியாபாரி. இவருக்கு, வேலூரைச் சேர்ந்த ஓர் இளைஞர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார். அவர் தன் நண்பர்கள் நான்கு பேரை நேசக்குமாருக்கு முகநூல் மூலமே அறிமுகம் செய்துவைத்தார். ஐந்து பேரும் சேர்ந்து […]
Police Department News
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ரயிலில் வழிப்பறி செய்தவர்களைசிறையில் அடைக்கப்பட்டனர்
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் காவல் ஆய்வாளர். திருமதி S.சசிகலா உதவி ஆய்வாளர் திரு D.பரந்தாமன் மற்றும் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸில் நடந்த கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்து தீவிர விசாரணைக்குப் பின் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி திருவெற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து எதிரிகளை சிறையில் அடைக்கப்பட்டனர் போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் M.குமார்
சென்னை – ஜெய்பூர் ரயிலில் கத்தியை காட்டி பயணிகளிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது
சென்னை: சென்னை – ஜெய்பூர் ரயிலில் கத்தியை காட்டி பயணிகளிடம் கொள்ளையடித்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அருண், விக்கி, ராஜா, மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வைர மோதிரம், 5 சவரன் நகை, 2 லட்சம் பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரயில் மெதுவாக செல்லும் இடங்களில் ஏறி பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கப்பட்டதாக ரயில்வே எஸ்.பி.மகேஸ்வரன் தெரிவித்தார்.. போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் M.குமார்
உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் சீனிவாசலு, வ/54, த/பெ.வேணுகோபால் என்பவர் வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சுஜன், வ/24, த/பெ ரமேஷ், என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாட்ச்மேன் வேலை மற்றும் சமையல் வேலை செய்து பின்பு வேலையை விட்டுவிட்டு நேபாளத்திற்கு சென்றுவிட்டார். […]
துரித நடவடிக்கையில் இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள்
19.11.2019.மாலை 5.மணியளவில் விருகம்பாக்கம் Grand treat hotel Parking நிறுத்தி சென்று திரும்பி வந்து எட்டு 8 மணிக்கு பார்க்கும் போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை, கண்டு பிடித்து தருமாறு MGR nagar பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் புகார் 20.11.2019 இரவு 10.30.மணியளவில் R7 Kk nagar காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் மீது துரித நடவடிக்கை எடுத்து 21.11.2019 இரவு 8. மணியளவில் உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள் உரியவரிடம் வாகனத்தை […]
செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது 15 1/2 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
கடந்த 07.11.2019 மற்றும் 15.11.2019 ஆகிய இரண்டு தினங்களில் E3-அண்ணாநகர் காவல் சரகத்திற்குட்பட்ட யாகப்பா நகர், எம்.ஜி.ஆர் தெருவில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் தாலி சங்கிலி மற்றும் 1 ½ சவரன் வளையலையும் பறித்து சென்றனர் மற்றும் மதுரை யாகப்பா நகர், சர்ச் ரோடு எதிரில் நடந்து சென்றுகொண்டடிருந்த பெண்ணிடம் 7 சவரன் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பறித்து சென்றதாக E3 அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு […]
`கூட்டு பலாத்காரம்; புதைக்கப்பட்ட உடல்!’ – 7 ஆண்டுகளுக்குப் பின் வெளியான
`கூட்டு பலாத்காரம்; புதைக்கப்பட்ட உடல்!’ – 7 ஆண்டுகளுக்குப் பின் வெளியான அதிர்ச்சித் தகவல்நண்பர்களோடு சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து புதைத்தவர் 7 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார். அவர் காட்டிய இடத்தில், புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன நெல்லை லாலுகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஜெயராம். இவர் கடந்த 5-ம் தேதி டவுன் தொண்டர் சன்னதி அருகில் உள்ள பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செபஸ்தியார் கோவில் தெருவை […]
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகேயுள்ள கருந்தேவிக்கவுண்டன்புதூரை
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகேயுள்ள கருந்தேவிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் முருகேசன், 45. திருமணமாகாதவர். பெற்றோர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.கடந்த, 18ம் தேதி, முருகேசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீடு, உள்தாழிடப்பட்டிருந்தது. வெள்ளகோவில் போலீசார், வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது, முருகேசன் இறந்துகிடந்தார். அருகில், மின் ஒயர் இருந்தது. மின்சாரம் தாக்கி, இரண்டு, மூன்று நாட்கள் முன்பே, அவர் இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
கடுமையான காவல் பணியிலும் பொதுமக்களின் நலனில் திருநெல்வேலி போலீசார்
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி-சங்கரன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மழையினால் ஏற்பட்டுள்ள பள்ளம் காரணமாக ஆங்காங்கே விபத்து ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இதனை சரிசெய்யும் நோக்கத்தில் 18.11.2019 -ம் தேதியன்று புளியங்குடி காவல்துறையினர் நகராட்சி உதவியோடு சாலையில் உள்ள பள்ளங்களில் கற்கள் கொண்டு நிரப்பி சாலைகளை சீரமைத்தனர். கடுமையான பணியின் இடையிலும் மக்களுக்காக சாலைகளை சீரமைத்த காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.










