Police Department News

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெறும் போராட்டம்: காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் அளவுக்கு அதிகமான போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். போலீஸாரின் கெடுபிடி காரணமாக நேற்று மெரினா கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக மெரினாவில் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் காவல் ஆணையர்  A.K.விஸ்வநாதன்    தடை விதித்துள்ளார். இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் […]