Police Recruitment

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் நகை, பணம் கொள்ளை, திருநகர் போலீசார் விசாரணை

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் நகை, பணம் கொள்ளை, திருநகர் போலீசார் விசாரணை

மதுரை,திருநகர், W1, காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியான தனக்கன்குளம், பி.ஆர.சி. காலனியில் வசித்து வருபவர் ராமசுந்தரம் மகன் காமராஜ் வயது 67/21,
இவர் கடந்த 27 ம் தேதி தனது வீட்டை பூட்டி வீட்டின் சாவியை தனது வீட்டிற்கருகில் குடியிருக்கும் தனது மைத்துனர் தேவராஜ் அவர்களிடம் கொடுத்து விட்டு தனது சொந்த வேலை விசயமாக வேலூர் சென்றார். இதற்கிடையே தேவராஜ் தினசரி விட்டை திறந்து வீட்டில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவு அளிப்பது வழக்கம். அது போல
கடந்த 13 ம் தேதி இவர் வழக்கம் போல் வீட்டை திறந்து மீன்களுக்கு உணவு அளித்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டும், வீட்டிலிருந்த பீரோ திறந்து துணிமணிகள் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார், உடனே தனது மைத்துனருக்கு தகவல் அளித்து அவரும் நேராக வந்து பார்த்த போது வீட்டிலிருந்த தங்கநகை 7 பவுன், 39,700, பணம், மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. உடனை திருநகர், W 1, காவல்நிலையத்தில் திருடு போன பொருட்கள் மற்றும் பணத்தை மீட்டுத்தர கோரி புகார் மனு அளித்தார், மனுவை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் திருமதி.அனுஷா மனோகரி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி திருடர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.