
மதுரை விளாச்சேரி மெயின் ரோட்டில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை, நடவடிக்கையெடுத்த திருநகர் போலீசார்
மதுரை, திருநகர், W 1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள், ஆய்வாளர் திருமதி, அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து சென்ற போது கிடைத்த ரகசிய தகவலின்படி திருநகர் விளாச்சேரி மெயின் ரோட்டில் பாபு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் சுயலாப நோக்கத்துடன் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை ஓனரான காஜாமைதின் மகன் ஜாஹீர் உஷேன் வயது 36/21, அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
