பரிசு விழுந்ததாக கூறும் மோசடி கும்பல்களிடம் கவனம்.
பொதுமக்களிடம் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பென்சன்தாரர்களை குறிவைத்து பரிசு விழுந்ததாக கூறி அவர்களிடம் OTP எண் மற்றும் CVV எண் (மறை குறியூட்டு எண் ) போன்ற தகவல்களைத் தங்களிடம் இருந்து பெற்று பணத்தை வங்கியில் இருந்து அபகரித்து விடுகின்றனர். இது போல் யாராவது தங்களை தொலைபேசியில் அழைத்து கேட்டால் தங்களது எந்த தகவல்களையும் கொடுக்க வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொள்கிறது.
