இன்று (19.07.2021) காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை காவல் கண்காணிப்பாளர்களிடையே நடைபெற்ற சிறிய வகை துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற செல்வி. G.ராகவி அவர்களுக்கு ரூபாய்.10¸000/- பரிசு தொகை வழங்கி கௌரவித்தார்கள். திரு. N.பாஸ்கரன்¸ இ.கா.ப.¸ கூடுதல் இயக்குநர்¸ திருமதி. A.ஜெயலட்சுமி¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர்¸ முனைவர். R.சிவகுமார்¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர் மற்றும் பயிற்சியாளர் திரு. இளங்கோவன்¸ து.கா.க (ஓய்வு) ஆகியோர் உடனிருந்தார்கள்
Related Articles
கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை ஒப்படைத்த காவலாளி
கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை ஒப்படைத்த காவலாளி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் கதிரேசன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு ரூ.5 ஆயிரம் பணத்தை யாரோ தவற விட்டு சென்றுள்ளனர். பணத்தை எடுத்த கதிரேசன் அதை உடனடியாக அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் ஒப்படைத்தார். கதிரேசனின் இந்த செயலை போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டது யார்? என்பது குறித்து போலீசார் […]
கடலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி:கலெக்டர், எம்.எல்.ஏ.,மேயர் பங்கேற்பு
கடலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி:கலெக்டர், எம்.எல்.ஏ.,மேயர் பங்கேற்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கடலூர் ஜவான் பவான் சாலையில் நடைபெற்றது. இப் பேரணியை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து போதை பொருளுக்கு எதிரான […]
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்ட அலுவலர் பணியிடம்-விண்ணப்பிக்க எஸ்.பி. அழைப்பு
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்ட அலுவலர் பணியிடம்-விண்ணப்பிக்க எஸ்.பி. அழைப்பு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணியமைப்பு, குற்ற வழக்குகள் தொடர்பான வழக்குகள் மற்றும் மேல்முறையீடுகளில் வரைவு வாதுரை, எதிர்வாதுரை தயார் செய்வதற்கு உதவியாக ஒரு சட்ட அலுவலர் பணியிடம் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.எனவே அந்த பதவிக்கு கீழ்கண்ட விதிகளின் தகுதி உள்ளவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். நியமனம் […]