
மதுரையில் தூக்க மருந்து மன நோய் மற்றும் வலி நிவாரண மருந்து சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கினார்
மதுரையில் தூக்கம் மனநோய் மற்றும் வலிநிவாரண மருந்துக்கள் விற்பனை குறித்து மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மருந்து கட்டுப்பாட்டு துறை மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நடந்தது.
மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் மருந்து ஆய்வாளர்கள் சேவுக ராஜன்முகமது பிர்தோஸ் சபீனா நிர்மலா தேவி முனியசாமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சம்பத் ஆய்வாளர் பிரேமலதா மருந்து வணிகர்கள் சங்கத்தலைவர் அலாவூதீன் செயலாளர் முருகேசன் நிர்வாகிகள் சந்திரசேகர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆன் லைன் மூலம் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தினர்
