கள்ளக்குறிச்சி பாதுகாப்பு பணியில் போலீசார்க்கு உணவு வழங்கிய ஊர்காவல் படை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. அதனை தொடர்ந்த டிஜிபி, ஐஜி, டி.ஐ. ஜி,க்கள் மற்றும் சேலம் திருவண்ணாமலை, கரூர், வேலூர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் 750 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்காவல் படை மண்டல தளபதி திரு.வசந்த பாலா அவர்கள் தலைமையிலான ஊர்காவல் படையினர் மினி வேன் மூலம் கொண்டுவரப்பட்ட உணவை போலீசாருக்கு வழங்கினார்கள். இவர்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.