


மதுரையில் தலைக்கவசம் அணியாத நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்
மதுரை மாநகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு, போலீஸ்சார் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர்.
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர், திரு. ஆறுமுக சாமி அவர்களின் உத்தரவின் பேரில்
மதுரை கல்லூரி அருகே மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர், திரு. செல்வின் அவர்கள் தலைமையில் மதுரை மாநகர் தெற்கு வாசல் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர், திரு. கணேஷ்ராம் அவர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள்,
தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஒட்டி செல்வோரை பிடித்து அபராதம் விதித்தனர்.
