வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசிய காவலர் தியாக தினம் அனுசரிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார்
வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசிய காவலர் தியாக தினம் அனுசரிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், இந்தியாவில் 1959-ம்ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி இந்திய-சீனா எல்லையான லடாக்கில் நடந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் 10 பேர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர். அதனால் அக்டோபர் 21-ந்தேதி தேசியகாவலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
காவலர்களின் பணி, செயல்பாடு, தினசரி கடமைகள், வழக்குப்பதிவுசெய்யும்முறை, விசாரணை, புலனாய்வு, குற்றசெயல்பாடுகளை கண்டறியும் தன்மை, போதைதடுப்பு, சட்ட விதிகளை பின்பற்றும்வழிமுறைகள் பற்றி விளக்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், வாண்டையார், (பயிற்சி) சக்தி கணேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், ஸ்டாலின் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவர்கள் கலந்துகொண்டனர்.
எழுத்தர் நாகராஜன் நன்றி கூறினார். முன்னதாக வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பணியின் போது கடந்தஆண்டு இறந்த போலீஸ்காரர் கச்சைகட்டி மகேந்திரன் படத்திற்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.