
கிணற்றில் பிணமாக மிதந்த மூதாட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தாதம்பட்டி நகர்ப்புற சாலையில் பக்கத்தில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் தெரியவில்லை. இது குறித்து தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
