Police Department News

சென்னையில் துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் போலீஸ் படை சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி

சென்னையில் துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் போலீஸ் படை சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி

சென்னையில் துப்பு துலங்காத கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் போலீஸ் படை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அவர்களின் அதிரடி நடவடிக்கை.

இந்த சிறப்பு அதிரடி போலீஸ் துப்பறியும் படையில் துடிப்பான இளம் காவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.சென்னை மாநகரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள துப்பு துலங்ப்படாத கொலை வழக்குகளை தூசு தட்டி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் குற்றங்களை குறைப்பதற்கும் பழைய குற்ற வழக்குகளை கண்டு பிடிப்பதற்கும் போலீஸ் கமிஷனர் திரு சங்கர் ஜிவால் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அடுத்த வரிசையில் கமிஷனர் சங்கர்ஜிவால் அவர்களின் உத்தரவின் பேரில் கடந்த 10 ஆண்டுகளாக துப்பு துலங்கால் இருக்கும் கொலை வழக்குகளை விசாரிக்க. சிறப்பு போலீஸ் துப்பறியும் படை உறுவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு படையில் துடிப்பான இளம் காவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் இதில் இடம்பெற்றுள்ள போலீசார் மிகவும் நுட்பமாக துப்பறியும் திறன் கொண்டவர்களாக உள்ளனர் அதே நேரத்தில் தொழில் நுட்ப ரீதியாக தகவல்களை திரட்டுவதில் கைதேர்ந்த காவலர்களும் இந்த சிறப்பு படையில் இடம்பெற்றுள்ளனர் இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் துப்பு துலங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட சுமார் 30 கொலை வழக்குகளை தூசு தட்ட தொடங்கியுள்ளனர் கொலை சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்டுள்ள போட்டோக்கள் மற்றும் ஆதாரங்களை நவீனப்படுத்தி அதன் மூலமாக அடுத்த கட்ட விசாரணையை முடிக்கி விடவும் இந்த சிறப்பு படை முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரில் நடந்த துப்பு துலங்காத பழைய கொலை வழக்குகளுக்கு உயிர் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் பழைய வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்படாமல் இருந்தால் முடிந்து போன வழக்குகளுக்கு மிகுந்த உயிரூட்டுவது என்பது சிக்கலாகவே இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அளித்துள்ள பேட்டியில் நிலுவையிலுள்ள கொலை வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படையை இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பார்கள் இந்த படையில் பணிபுரிய திறமையான இளம் காவலர்கள் ஆர்வமுடன் இணைந்துள்ளனர் என்று தெரிவித்தார் 15 நாட்களுக்கு ஒருமுறை கொலை வழக்குகளின் நிலை என்ன என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளதாக கமிஷனர் கூறியுள்ளார் இது போன்று சென்னை மாநகர காவல்துறையில் துப்பு துலங்காமல் இருக்கும் கொள்ளை வழக்குகளை கண்டு பிடிக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் 2004 ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையில் நடைபெற்ற 6 பெண்களின் கொலையில் எந்தவித துப்பும் துலங்காமலேயே உள்ளது. விடை தெரியாத கேள்வியை போல மர்மமாகவே மாறிப் போன அந்த கொலைகள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்

2004 ஜூன் 21 கே.கே.நகரில் பரிமளம் என்ற பெண் கொலை செய்யப்பட்டார் இவரது கணவர் புள்ளியல் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் தனியாக இருந்த பரிம ளம் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டிலிருந்த நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் கொலையாளிகள் திருடி சென்றனர். இந்த கொலை சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன.ஆனால் இன்னும் துப்பு துலங்காமலே இருக்கிறது. 2007 நவம்பர் 17 வேளச்சேரி சங்கர் அவென்யூ இந்திரா தெருவில் வசித்து வந்த வேக்கப்மேரி வேக்கப் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் இன்னும் துப்பு துலங்காமலே உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்டோபர் 2011 கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனி பகுதியில் பரமேஸ்வரி என்ற மூதாட்டி கொலை செய்யயட்டார் இந்த வழக்கிலும் சுமார் 12 ஆண்டுகளாகியும் எந்த வித துப்பும் கிடைக்க வில்லை

அக்டோபர் 2011 மூதாட்டி பரமேஸ்வரி கொலை சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்னரே ஆதிலட்சுமி என்ற துணை நடிகை ஒருவரும் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கு விசாரணையும் கினற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. கோடம்பாக்க தொகுதியை கலங்கடித்த இந்த கொலை சம்பவங்களில் துப்பு தொலக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்

2011 நவம்பர் கே.கே.நகர் நெசப்பாக்கத்தில் அடுக்கு மாடி குடுயிருப்
பில் ரஞ்சிதா என்கின்ற பெண் கொலை செய்யப்பட்டார். கொடூரமாக கழுத்தை அருத்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவத்திலும் மர்மம் நீடித்து கொண்டே இருக்கிறது.

ஏப்ரல் 2013 பெரம்பூரில்
சுமதி என்ற பெண் கொல்லப்பட்டார் இந்த வழக்கு விசாரணையிலும் துப்பு ஏதுவும் கிடைக்காமல் முடக்கப்பட்டியிருந்தது.

இப்படி மேற்படி 6 பெண்களை கொண்றவர்களும் யார் யார் என்பது பற்றிய தகவல்கள் தெரியாத நிலையில் போலீசிரும் அது தொடர்பாக பதிவேடுகளை மூலையில் தூக்கி போட்டு விட்ட நிலையில் அவைகளை மீண்டும் தூசு தட்டி எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.